தனுஷ்கோடி
உங்களில் எத்தனைப் பேருக்கு தெரியும்.. ?? புயலின் உக்கிர தாண்டவத்நில் ஒரு செழிப்புமிக்க நகரமே காணாமல் போன விஷயம்.. அதுவும் நம் தமிழ்நாட்டில் !! நிவர் புயலின் இயற்கைச் சீற்றத்திற்கு நடுவே, நம்மிடம், மொபைல் போன் முதல், நமக்குச் சொந்தமானப் பல சாட்டிலைட்டுகள், வயர்லெஸ் கருவிகள், இலவச வாட்ஸ்அப் தொடர்பு, தமிழக மற்றும் மத்திய அரசசுளின் அவசரக்கால உதவிகள் வரையென நம்மை காப்பாற்ற, பாதுகாப்புடன் சந்தோஷமாக இருக்கிறோம். இன்றைய அசுர விஞ்ஞான வளர்ச்சி நம்மைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்கிறது. நாம், மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஆம், பழைய நினைவொன்றை, இன்றையத் தலைமுறையினர் நினைத்துப் பார்க்க வேண்டிய நேரமிது. சுமார், 55 ஆண்டுகளுக்கு முன், தனுஷ்கோடி என்ற ஒரு வணிக நகரம் என்று ஒன்று இருந்ததும் அது மறைந்தது எப்படி என்றும் நெஞ்சைப் பிளக்கும் கதையை கேளுங்கள்.. !! இன்றைய தலைமுறையினர் சிலருக்கு மட்டுமே தனுஷ்கோடி என்ற ஊர் தமிழகத்தில் இருந்திருக்கிறது, என்று தெரியும். தனுஷ்கோடி என்ற தொலைந்து போன ஊரின் பின்னே இருக்கும் அந்த கடுந் துயரத்தைப் பற்றி, இன்று ய...