எஃப்’ மாற்றம் ‘ஜே’ கீகளில் இருக்கும் சிறு கோடு, காரணம் தெரியுமா..?!
சின்ன சின்ன விடயங்கள் மீதும் கவனம் செலுத்தும் மிக சிலரில் நீங்களும் ஒருவரா..? அப்போது நிச்சயமாக உங்கள் கண்களில் ‘இது’ நிச்சயம் தென்பட்டிருக்கும். அது வேறொன்றுமில்லை, கீபோர்ட்களில் உள்ள எஃப் மற்றும் ஜே கீகளில் உள்ள ஒரு சிறு கோடு..!!
அதை கண்டுபிடிக்க தெரிந்த நம்மில் பலருக்கு அந்த சிறுகோடு எதற்காக அமைக்கப்பெற்றுள்ளது என்பது பற்றி தெரிந்த்திருக்க வாய்ப்பில்லை. அதன் காரணத்தை ஒருமுறை நீங்கள் தெரிந்து கொண்டால் அதை கடைசி வரை மறக்கவே மாட்டீர்கள்..!
சிறு கோடுகள் :
15 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட கீபோர்ட்களில் மட்டுமே ‘எஃப்’ மற்றும் ‘ஜே’ கீகளில் சிறு கோடுகள் இல்லாமல் இருக்கும். அதன் பின்பு தயாரிக்கப்படும் அணைத்து கீபோர்ட்களிலும் இச்சிறு கோடுகளை காண முடியும்.
தனித்துவமான வழி :
நம்பினால் நம்புங்கள், கீ போர்ட்களில் இருக்கும் மிகவும் முக்கியமானவைகள் ஆகும், இந்த இரு கோடுகளும் தான் வேகமாக ‘டைப்’ செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான வழியாகும்.
பார்க்காமலேயே டைப்:
அதாவது, பொதுவாக டைப் செய்பவர்களை நீங்கள் கவனித்தீர்கள் என்றால், அவர்கள் கீபோர்ட்தனை பார்க்காமலேயே டைப் செய்வார்கள். அப்படியானோர்களின் கைகள் கீ போர்டில் சரியான இடத்தில் வைத்துக்கொள்ள உதவுவதே இந்த இரண்டு சிறு கோடுகளும்..!
கற்றல் வழி :
இதன் மூலம் கீ போர்டில் நேரம் அதிகம் செலவு செய்வது குறையும் மற்றும் கண்களால் காண்பதை விட கைகளால் உணர்ந்து கொள்வது மிகவும் பயனுள்ள ஒரு கற்றல் வழியாகும்.
ஜூன் இ. போட்டிச் :
இந்த வழிமுறையை கண்டுப்பிடித்தற்காக ஜூன் இ. போட்டிச் (June E. Botich) என்பவருக்கு தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
பழகிக்கொள்ளுங்கள் :
இப்போது உங்கள் எதிரில் கீ போர்ட் இருந்தால் ‘எஃப்’ மற்றும் ‘ஜே’ கீக்களை சரியாக பயன்படுத்த பழகிக்கொள்ளுங்கள். “கீபோர்ட் பார்த்து டைப் பண்ணினாலே தப்பு தாப்பாக தான் வரும், நான் எப்போ கீபோர்ட் பார்க்காமல் டைப் பண்ணிருக்கேன்” என்று கூறுபவர்களா நீங்கள், அப்போது முதலில் டைப்பிங் கற்றுக்கொள்ளுங்கள், அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமில்லை..!
உங்கள் கண், கழுகு கண்ணா..?! அப்போது இதில் என்ன மறைந்திருக்கிறது..?
நம்ம முன்னோர்கள் ‘ஜகஜால’ கில்லாடிகள் தான்..!
அடடா.. இத்தனை வருஷமா ‘இது’ தெரியாம போச்சே…!!
Comments
Post a Comment