வில்வம்

ஒன்பது இதழ் கொண்ட வில்வம் மஹாவில்வம் எனப்படும்.இது இமய மலை பகுதியில் அதிகம் காணப்படுகிறது.

வில்வத்தில் 12 வகைகள் உள்ளன.அவற்றில் மகா வில்வம்,காசி வில்வம்,ஏக வில்வம் என்னும்
மூன்றும் முக்கியமானவை.
மகா வில்வம் வித்தியாசமானது.5,7,9,11,12,இதழ்கள் கொண்டதாக விளங்குகிறது
ஒரு முறை " மகா வில்வம் " பிரதஷினம் வந்தால் ..கைலாய மலை போய் வந்த பலன் கிடைக்கும்.

இதில் மஹாவில்வத்தை கோவில்,ஆசிரமம்,சிவசமாதி(ஜீவசமாதியின் நிஜப் பெயர்) போன்ற
இடங்களில் மட்டுமே வளர்க்க வேண்டும்;(எக்காரணம் கொண்டும் வீட்டில்,வீட்டுத் தோட்டத்தில்
வளர்க்கக் கூடாது)
🌿 மஹாவில்வத்தில் இலைகள் ஒரு காம்பில் ஏழு,ஒன்பது,பனிரெண்டாக இருக்கும்.
🌿 மகா வில்வ தளத்தினால் அர்சிப்பது மிகவும் விசேசமானது.பன்மடங்காய் பலன்தருவது.புண்ணியத்தை மழையாகப் பொழிவது...அதனால் ஆலயங்களில் மட்டுமே அபூர்வமாக
வளர்க்கப்படும்.
🌿 மகா வில்வதளங்களை அதிகமாகப் பறித்தல் கூடாது.இதனால் புண்ணிய மகா வில்வ மரத்தை
அனைவரும் தரிசிக்கலாம். ஆலயங்களில் மக்கள் நன்மைக்காக நடத்தப் பெறும் பூஜைகளிலும்
யாகத்திலும் பயன்படுத்த வேண்டும்.
🌿

மகா வில்வ மரத்தை சென்னை மாங்காடு வாலீஸ்வரர் சிவாலயத்திலும் ,கோவூர் சுந்தரேஸ்வரர்
சிவாலயத்திலும் தஞ்சை கல்யாணபுரம் ஸ்ரீ வைத்தியநாதர் கோயிலிலும் தரிசிக்கலாம்.
🌿 காசி வில்வ மரத்தை தல மரமாக விராலி மலை முருகன் கோயிலிலும் நெய்வேலி நடராஜர்
தியானசபையிலும் காணலாம்.
🌿

மிகவும் அரிதான ஏக வில்வத்தினை ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஆலயத்தில் தரிசிக்கலாம்.
🌿 மகா வில்வமானது நடராஜ் பெருமான் நாட்டியத்தில் உத்திர நட்சத்திர நாளில் அபிஜத்
முகூர்த்தம்,பிரம்ம முகூர்த்தம்போன்ற பன்னிரு முகூர்த்தங்களில் ஒவ்வொரு வில்வ இலையாக
உண்டானது.இதன் ஆதி மூலத்தை சிதம்பரத்தில் சிதம்பர ரகசியத்தின் ஒரு அங்கமாய் உள்ள சுவர்ண
வில்வ மாலையாக தரிசிக்கலாம்.

Comments