தியானம்

*தியானம் என்றால் என்ன?* என்று ரமண மகரிசியிடம் ஒரு சிறுவன் கேட்க,......ரமண மகரிசியோ சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்.

சிறுவனிடம், "நான் எப்போ *'ம்'* சொல்றேனோ அப்போது  சாப்பிட ஆரம்பிக்கணும்....

அதே மாதிரி எப்போது  *'ம்'* சொல்றேனோ, அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது.புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே.

சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக் குழப்பம்.

ரமண மகரிசியின் *'ம்'*க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி காத்திருந்தான்.

சிறுவனைச் சிறிது காக்க வைத்து சற்று நேரத்திற்கு பின் *'ம்'* என்று சொன்னார் ரமண மகரிசி.

சிறுவன் சாப்பிட ஆரம்பித்து கொண்டே,அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது *'ம்'* வந்து விடக் கூடாதே,  என்ற கதை பதைப்புடன் பெரிய பெரிய துண்டுகளாக பிய்த்து எடுத்து அவசர அவசரமாகத் உண்டு கொண்டே ரமண மகரிசியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக இருந்தான். நேரம் கரைந்தது.

புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய, *'ம்'* என்று  சொல்வதாக இல்லை.

தோசையோ சிறியதாகி ஒரு சிறு துண்டு மட்டுமாக  மாறி மீதமிருந்தது. இப்போது. சிறுவனும் அந்த சிறிய தோசை துண்டை, கையில் வைத்தபடி, எப்படா இந்தத் தாத்தா *'ம்'* சொல்லுவார் என்று காத்திருந்தான்....

சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்.

எதிர்பாராத ஒரு நொடியில் *'ம்'*என்று சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி துண்டை வாயில் போட்டுக் கொண்டான்.

*"இரண்டு 'ம்'* க்களுக்கு நடுவில் *உன்கவனம் எப்படித் தோசை மேலும்,என் மேலும் இருந்ததோ,*..அதே போல தான் நீ எந்தக் காரியம் செய்தாலும் அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பேர் தான் தியானம். புரிந்ததா இப்போ?" என்றார் ரமண மகரிசி புன்னகைத்தபடி....

Comments

Popular posts from this blog

Import, restore, or back up contacts in google

Whatsapp Floating icon in HTML

How to Set FileZilla to Open and Edit Files with Notepad++