வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் - *செப்டம்பர் 17
வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் - *செப்டம்பர் 17 !!*
சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..!
'எதை வேண்டுமானாலும் புள்ளி விவரங்களால் அளந்திட முடியும், உண்மையைத்தவிர."
🏁 பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.
🏁 இவர் காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியது மட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக் கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார்.
🏁 இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி 'யுனெஸ்கோ நிறுவனம்" பெரியாருக்கு 'புத்துலக தொலைநோக்காளர்", 'தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்", 'சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை" என பாராட்டி விருது வழங்கியது.
🏁 அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி, பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் மற்றும் தந்தை பெரியார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
🏁 பகுத்தறிவின் சிற்பி, அறிவு பூட்டின் திறவுகோல், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார் 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி (94வது வயதில்) மறைந்தார்.
நரேந்திர மோடி
✦ இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி குஜராத் மாநிலம், மேஹ்சனா மாவட்டத்திலுள்ள வட்நகர் என்ற இடத்தில் பிறந்தார்.
✦ ஆர்.எஸ்.எஸ்-இன் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த இவர், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும் சேர்ந்து, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச்செயலாளராக உயர்ந்தார்.
✦ பிறகு 1998-ல் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மோடி, விரைவில் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற ஐந்து மாநிலங்களுக்கு, பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
✦ 1998ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்ற பொழுது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 2001-ல் குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார். பிறகு 2014-ல் இந்திய பிரதமராக பதவியேற்றார்.
முக்கிய நிகழ்வுகள்
✍ 1889ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தப் படைப்பாளியுமான வ.ரா. எனப்படும் வ.ராமசாமி ஐயங்கார் தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த திங்கள+ரில் பிறந்தார்.
🌍 1789ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வில்லியம் ஹேர்ச்செல், மைமாஸ் என்ற துணைக்கோளை கண்டுபிடித்தார்
👉 1953ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தமிழறிஞர் திரு.வி.கலியாணசுந்தரனார் மறைந்தார்.
🏢 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
Comments
Post a Comment