செப்டம்பர் 19

விண்வெளியில் மாரத்தான் ஓடிய வீராங்கனை பிறந்த தினம் - *செப்டம்பர் 19 !!*

இன்றைய பொன்மொழி
'கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போராடும் எண்ணமே இல்லாமல் போய் விடும்...!"

சுனிதா வில்லியம்ஸ்

✈ இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி பிறந்தார்.

✈ 1987-ல் அமெரிக்க கடற்படையில் இளநிலை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவர் 2 ஆண்டுகளில் கடற்படை விமானியானார்.

✈ 2006ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி டிஸ்கவரி விண்வெளி கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டார். அப்பொழுது இவர் பகவத்கீதை, விநாயகர் சிலை, கொஞ்சம் சமோசாக்களை விண்வெளிக்கு எடுத்துச்சென்றார்.

✈ விண்வெளியில் மாரத்தான் ஓடிய முதல் நபர் சுனிதா. விண்வெளியில் ஓடிக்கொண்டே தனது தலைமுடியை கத்தரித்தார். பிறகு, 'லாக்ஸ் ஆப் லவ்" அமைப்புக்கு அதை வழங்கினார்.
வில்லியம் கோல்டிங்

✍ இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் நாவல் ஆசிரியரும், கவிஞருமான சர் வில்லியம் ஜெரால்டு கோல்டிங் 1911ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி இங்கிலாந்தின் கார்ன்வால் பகுதியில் உள்ள நியூகி நகரில் பிறந்தார்.

✍ இவர் பல கதை, கட்டுரைகளை எழுதினார். இவரது படைப்புகள் பல முறை நிராகரிக்கப்பட்டாலும், மனம் தளராமல் தொடர்ந்து எழுதினார்.

✍ இவர் லார்டு ஆஃப் தி ப்ளைஸ் என்ற நாவலை 1954-ல் எழுதினார். நன்மை, தீமை இரண்டுக்கும் இடையேயான மனிதனின் உள்முகப் போராட்டங்கள் குறித்த இந்த நாவல் உலகம் முழுவதும் பிரபலமடைந்து, மாபெரும் வெற்றி பெற்றது.

✍ 'ரைட்ஸ் ஆஃப் பேஸேஜ்" நாவலுக்காக 1980-ல் புக்கர் பரிசு பெற்றார். பல விருதுகள், கௌரவங்களைப் பெற்ற இவரது நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. 1983-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். 1988-ல் சர் பட்டம் வழங்கப்பட்டது.

✍ சிறுகதை, நாடகம், கட்டுரை, விமர்சனம் என பலவிதமான வெற்றிப் படைப்புகளைத் தந்த வில்லியம் கோல்டிங் தனது 81வது வயதில் (1993) மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

💣 1957ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது.

👭 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடானது.

Comments

Popular posts from this blog

common for php config location code

Off Page SEO

How to Crack FaceBook Social TooLkit & Use Premium Tools for Free