வரலாற்றில் இன்று - *20.09.2018
வரலாற்றில் இன்று - *20.09.2018 !!*
சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள் !
'விதைகள் தங்களுக்கு பிடித்த இடத்தை தேடி முளைப்பதில்லை. அதற்கு கிடைத்த இடங்களில் தன்னை செடியாகவோ, மரமாகவோ மாற்றிக்கொள்கின்றன. அதைப்போலதான் மனிதனின் வாழ்க்கையும் இருக்க வேண்டும். விழுந்துவிட்டோமே என்று எண்ணாமல் விழுந்த இடத்தில் இருந்து எழுந்து முன்னேறிச் செல்லுங்கள். வாழ்க்கை வரமாகும்."
மார்க்கண்டேய கட்சு
📰 முன்னாள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், உயர்நீதிமன்றங்களில் முதன்மை நீதிபதியாகவும் இருந்த மார்க்கண்டேய கட்சு 1946ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி பிறந்தார்.
📰 இவர் 1967-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பயின்று சட்டப்படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார்.
📰 இவர் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் புதுதில்லி, ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், லக்னோ ஆகியவற்றில் கௌரவப் பேராசிரியராக இருந்தார்.
📰 இவர் இந்தியப் பத்திரிக்கை கவுன்சில் தலைவராக (2011-2014) இருந்தார். சமூக மாற்றத்திற்கான நல்ல கருத்துகளைப் பரப்பிய இவர் தனது 72வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
ஜேம்ஸ் திவார்
🍼 வாக்கும் பிளாஸ்க்கை (எயஉரரஅ கடயளம) கண்டுபிடித்த ஜேம்ஸ் திவார் 1842ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள கின்கார்டைன் எனும் கிராமத்தில் பிறந்தார்.
🍼 இவர் 1897ல் இரட்டைசுவர் கண்ணாடி குடுவையில், வெற்றிடத்தோடு மேலும் சில மாறுதல்களை செய்தபோது, குளிர் நிலையில் மட்டுமல்ல வெப்ப நிலையிலும் பொருட்களை பாதுகாக்க முடியும் என்பதை கண்டறிந்தார்.
🍼 வெற்றிடத்தின் வழியாக வெப்பம் கதிராக வெளியேறிவிட முடியும் என்பதால் குடுவையின் உட்புறம் வெள்ளி முலாம் பூசி, அதில் சிறிதளவு வெப்பமும் வெளியேற வாய்ப்பின்றி தடுத்தார் திவார். பிறகு, 'கார்டைட்" என்ற வெடிப்பொருளை கண்டுபிடித்தார்.
🍼 இரட்டை சுவர் பாத்திர வடிவமைப்பை கண்ணாடி குடுவையாக ஏற்படுத்தி, பலவித வாயுக்களை அந்த இரண்டு சுவருக்கும் இடைப்பட்ட இடைவெளியில் அடைத்து வைத்து உள்ளிருக்கும் திரவத்தின் குளிர், வெப்பம் மாறா தன்மையை சோதனை செய்தார்.
🍼 கிட்டத்தட்ட உலகின் எல்லா நாடுகளிலும் பிரபலமான, விஞ்ஞான உலகமே பார்த்து வியந்த ஜேம்ஸ் திவார், தனது 80வது வயதில் (1923) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
🌺 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி பெண் விடுதலைக்காக போராடிய அன்னி பெசன்ட் அம்மையார் மறைந்தார்.
✈ 1927ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பர்கதுல்லா மறைந்தார்.
📝 1878ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி தி ஹிந்து இதழ் வெளிவரத் துவங்கியது.
🚀 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி துருவ செயற்கைக்கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.
Comments
Post a Comment