தொழிலாளர் பாதுகாப்பு
நான் வேலை செய்த நிறுவனத்தில் எனது ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கிக்கொண்டார்கள். இப்போது அதை திரும்ப தர என்னை அழைகழிக்கறார்கள். இது சட்டப்படி சரியான செயலா? இதற்கு சட்டத் தீர்வு என்ன?
நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு அவர்களை கட்டாயப்படுத்தியோ அல்லது மிரட்டியோ வேலை செய்ய வைப்பது இந்திய தண்டனை சட்டப்படி கிரிமினல் குற்றமாகும்.
மேலும் இது தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது.
இது போன்ற குற்றச் செயல்களுக்கு கீழ்காணும் பிரிவின் கீழ் வழக்கு பதிவும் செய்ய முடியும்.
IPC-374 : #சட்டப்பூர்வமற்ற #கட்டாய #உழைப்பு
IPC-370 : #அடிமையாக #வகை #செய்தல்
IPC-503 : #குற்றமுறு #மிரட்டல்
IPC-405 : #குற்றமுறு #நம்பிக்கை #மோசடி.,
மற்றும் பல
நீங்கள் தற்சமயம் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி விட்டால் வழக்கறிஞர் மூலம் அந்த நிறுவனத்திற்கு உங்கள் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கும் படி நோட்டீஸ் அனுப்பி உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.
Comments
Post a Comment