வாய்ப்புகள் எப்போதும்
'🌸இன்றைய சிந்தனை..( 02.01.2019)..
..........................................................
'' வாய்ப்புகள் எப்போதும்''..
....................................................
நான் வாய்ப்பு என்னைத்தேடி வந்தபோது அதை மிஸ் பண்ணிட்டேன் எனும் புலம்பலை கேட்டிருப்பீர்கள்.
நீங்களே கூட அதை சொல்லியிருக்கலாம்! வாய்ப்பு வந்தபோது அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வில்லை!
வாய்ப்புகள் எப்போதும் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு நம்மிடம் வருவதில்லை. எப்படா வாய்ப்பு வரும் என நாம்தான் தயாராக இருக்க வேண்டும்.
வாய்ப்பு எந்தப் பக்கமாக வந்தாலும் லபக் எனப்பிடித்துக் கொள்ள வேண்டும். ஓர் உறுமீனுக்காக காத்திருக்கும் கொக்கின் கவனம் அவசியம்.
மீன் வரும்போது கொக்கு தூங்கிக் கொண்டிருந்தால் அதன் அலகில் மீன் எப்போதுமே இருக்கப் போவது இல்லை!
உங்கள் லட்சியம் எதில் இருக்கிறது என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். நடிப்பு, பாட்டு, இலக்கியம், விஞ்ஞானம், மருத்துவம் என எதில் வேண்டுமானாலும் ஆர்வம் இருக்கலாம்.
அந்தத் துறையில் எவ்வளவு கற்க முடியுமோ அவ்வளவையும் கற்றுக்கொள்ளுங்கள்.
அந்தத் துறையில் நுழைவதற்கான வாய்ப்பு நள்ளிரவில் வந்து ஜன்னலைத் தட்டினாலும் சந்திக்கத் தயாராய் இருங்கள்!
வெற்றியாளர்களுக்குரிய சிறப்புத் தகுதியே இதுதான். அவர்கள் வாய்ப்புகளை வெற்றிடத்திருந்து கூட உருவாக்குவார்கள்.
எப்போதும் ஒரு சின்ன வாய்ப்பு கண்ணுக்குத் தெரிந்தாலும் உடனே அதை பயன்படுத்திக் கொள்ளவார்கள்.
அந்த வாய்ப்பை ஒரு சாதனைக்கான உயரத்துக்குக் கொண்டும் போவார்கள்.
எப்போதும் தயாராய் இருப்பவர்கள் வாய்ப்புகள் வரும்போது இறுகப் பற்றிக் கொள்கிறார்கள்.
வாய்ப்புகள் எப்படி இடம், பொருள், ஏவல் பார்த்து வராதோ, அதே போல வயதைப் பார்த்தும் வருவதில்லை,
எந்த வயதிலும் உங்களுக்கான வாய்ப்பு வரலாம். மிகச்சின்ன வயதிலேயே கூட வரலாம்.
அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என நல்ல வாய்ப்புகளை ஒதுக்கி விட்டால், பிறகு அதற்காக வருத்தப்படவும் நேரிடலாம்.
ஒரு வாய்ப்பைப் பற்றிக் கொண்டபின் அந்த வாய்ப்பை சாதனை வெற்றியாக மாற்றும் உறுதியும், வெற்றியின் மீதான வெறியும் வேண்டும்.
அப்போதுதான் அந்த வாய்ப்பு உங்களை வாழ வைக்கும்.
ஆம்.,நண்பர்களே..,
வாய்ப்புகள் நிச்சயம் வரும். வந்தே தீரும். அது வரும் போதும் அதை அறிந்து கொள்ளம் பார்வையும், பற்றிக் கொள்ளும் திறமையும், உயரப் பறக்கும் தீரமும் நம்மிடம் இருக்கட்டும்.
என்னால் ஓட முடிந்தால் ஓடுவேன், நடக்க முடிந்தால் நடப்பேன், தவழத்தான் முடியுமெனில் தவழ்வேன். எப்படியானலும் முன்னோக்கி மட்டுமே என் பயணம் தொடரும் எனும் உறுதி இருக்கட்டும்.
அப்புறமென்ன,
வெற்றிகள் உங்கள் வசம்!வாய்ப்புகள் கதவை தட்டும்
பிடித்துக்கொண்டால் வெற்றி எட்டும்..🙏🏻❤🙏🏻❤🙏🏻❤
Comments
Post a Comment