பேஸ்புக் அரசியல் விளம்பரம்: கோடிகளைக் கொட்டிய பாஜக முதலிடம்!

ஹைலைட்ஸ்:


பேஸ்புக் அரசியல் விளம்பரங்கள் வெளியிட்டதில் பாஜக முதலிடம்.


காங்கிரஸ் 2வது இடம். அதிமுகவுக்கு 5வது இடம்.


பேஸ்புக்கில் கடந்த ஆறு வாரங்களில் 48 பக்கங்களிலிருந்து சுமார் 18,000 அரசியல் விளம்பரங்கள்வெளியாகியுள்ளன என நாளேடு ஒன்றின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்டங்கள் முடிந்துள்ள நிலையில் மூன்றாவது கட்டத் தேர்தல் வரும் 23ஆம் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் பேஸ்புக்கில் மொத்தம் 14.7 கோடி ரூபாய் செலவில் 72,694 விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 35,000 விளம்பரங்கள் அரசியல் விளம்பரங்கள். இதில் 18,000 விளம்பரங்கள் 48 பக்கங்களிலிருந்து வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக அவை ரூ.5.3 கோடி செலவிட்டுள்ளன.

குறிப்பாக 50,000 ரூபாய்க்கு அதிகமான விலை கொடுத்து செய்யப்பட்ட விளம்பரங்களில் 85% அந்த 48 பக்கங்களால் வெளியிடப்பட்டவை. பெரிய செலவில் அரசியல் விளம்பரங்களைச் செய்திருக்கும் பக்கங்கள் நேரடியாக அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கொண்டவையாக இல்லை.

பாஜக ஆதரவு விளம்பரங்கள்

Bharat Ke Maan Ki Baat என்ற பக்கம் ரூ.2.2 கோடி செலவில் 3,200க்கு மேற்பட்ட அரசியல் விளம்பரங்களைச் செய்துள்ளது. My First Vote for Modi என்ற பக்கம் ஒரு கோடி ரூபாய் செலவில் 7,200 அரசியல் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. Nation with NAMO என்ற பக்கம் ரூ.1.2 கோடி செலவிட்டு 3,100 அரசியல் விளம்பரங்களைச் செய்திருக்கிறது.

காங்கிரஸ் ஆதரவு விளம்பரங்கள்

காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரசார பணியில் உள்ள ஹிதேஷ் சாவ்லா நடத்தும் Mudda Dhaba என்ற பக்கம் 2.5 லட்சம் ரூபாய் செலவிட்டு 35 விளம்பரங்கள் செய்துள்ளது. Shut the Fake UP என்ற பக்கத்திலிருந்து 2.4 லட்சம் செலவில் 260 விளம்ரங்கள் வந்துள்ளன.

பிற விளம்பரங்கள்

கட்சி சார்ந்த விளம்பரங்கள் தவிர சுமார் 150 பக்கங்கள் ரூ.3 கோடி மதிப்பில் 9,800 விளம்பரங்களை வெளியிட்டிருக்கின்றன. குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பெயரைக் குறிப்பிட்டாமல் அரசியல் கட்சி என்று மட்டும் காட்டிக்கொள்ளும் 35 பக்கங்கள் 2 கோடி ரூபாய்க்கு 4,500 விளம்பரங்களை வெளியிட்டுள்ளன.

80 பக்கங்கள் மட்டுமே பாஜகவுக்குச் சாதமான விளம்பரங்களை வெளியிட்டிருக்கின்றன என பேஸ்புக்தரப்பில் கூறப்படுகிறது. ஒட்டுமொத்த விளம்பரங்களில் 60% அவற்றின் விளம்பரங்களே எனவும் கூறுகிறது. காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமான விளம்பரங்களை வெளியிட்ட பக்கங்கள் ஒரு கோடி ரூபாய் செலவில் 4,400 விளம்பரங்களை மட்டுமே வெளியிட்டதாகவும் தெரிவிக்கிறது.

பாஜக மற்றும் காங்கிரஸுக்குப் பின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 81 லட்சம் மதிப்பீட்டுல் பேஸ்புக்கில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த இடங்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (ரூ. 62 லட்சம்), அதிமுக (ரூ.18 லட்சம்), சிவ சேனா (ரூ. 7.9 லட்சம்), ஆம் ஆத்மி (ரூ. 3.8 லட்சம்), பகுஜன் சமாஜ் (ரூ. 3.8 லட்சம்), திமுக (ரூ.3.1 லட்சம்) மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் (ரூ.1.5 லட்சம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன

Comments

Popular posts from this blog

common for php config location code

Off Page SEO

How to Crack FaceBook Social TooLkit & Use Premium Tools for Free