கூகுள் பே, அமேசான் பே நிறுவனங்களுக்கு 24 மணி நேர கெடு - ஆர்.பி.ஐ
இந்தியாவில் நடைபெறும் பணப்பரிமாற்றம் தொடர்பான தரவுகளை உள்நாட்டிலேயே சர்வர் அமைத்து சேமித்து வைக்க வேண்டும் என்ற உத்தரவு குறித்து முடிவெடுக்க கூகுள் பே, அமேஸான் பே உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி 24 மணி நேர கெடு விதித்துள்ளது.
இந்தியாவில் இருந்து பணப்பரிமாற்றம் நடந்தால் அதன் தரவுகளை வெளிநாடுகளின் சர்வர்களில் சேமித்து வைக்கக் கூடாது என்றும், இந்தியாவில்தான் சேமித்து வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
ஆனால் கூகுள் பே, அமேசான் பே போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் தான் இந்திய பணபறிமாற்ற தரவுகளை சேகரித்து வருகின்றன. இந்த நிலையில் 24 மணி நேரத்திற்கு தரவுகள் சேமிப்பு விவகாரத்தில் கூகுள் பே மற்றும் அமேசான் பே முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
Comments
Post a Comment