goverment
அயல் நாட்டில் மது அருந்திய குற்றத்திற்காக மூவர் கைது செய்யப்பட்டனர்...
ஒரு ரஷ்யன், ஒரு சீனன், ஒரு தமிழன்.. அவர்களுக்கு 50 சவுக்கடிகள் தண்டனையாக அளிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் அதற்கு முன்.. அவர்கள் வேண்டும் 'இரண்டு' கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என சொல்லப்பட்டது..
முதலில் ரஷ்யன்...
"எனக்கு 50 சவுக்கடிகளில் பாதியாக குறைத்து 25 ஆக கொடுங்கள்.." என்றான். ஒப்புக் கொள்ளப்பட்டது.
இரண்டாவது என்ன..? என்று கேட்டனர். "என் முதுகில்.. ஒரு பெரிய தலையணை ஒன்றை கட்டுங்கள்.." என்றான். அவ்வாறே செய்யப்பட்டது.. பத்து சவுக்கடியில் தலையணை கிழிந்து அவன் பலமான காயத்துக்கு ஆளானான்..
அடுத்து சீனன்...
"எனக்கும் 50 சவுக்கடியில்.. பாதியாக குறைத்து 25 அடி கொடுங்கள்" என்றான். ஒப்புக்கொள்ளப்பட்டது..
இரண்டாவது... "என் முதுகில் இரண்டு தலையணைகளை கட்டுங்கள்.." என்றான்.. அவ்வாறே செய்யப்பட்டது.. 15 சவுக்கடிகளில் தலையணைகள் கிழிந்து அவன் முதுகு பிளந்தது..
அடுத்ததாக தமிழன்..
அவன் அமைதியாக சொன்னான்.. "எனக்கு 50 சவுக்கடியை 75 ஆக உயர்த்துங்கள் என்றான்.. அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தனர். ஒப்புக் கொள்ளப்பட்டது.. இரண்டாவது என்ன..? என்று கேட்கப்பட்டது. அவன் சொன்னான்.... "எனக்கு தண்டனை கொடுத்த.. நீதிபதியை, என் முதுகில் தூக்கி கட்டுங்கள்" என்றான்..
இதனைக் கேட்ட நீதிபதி அதிர்ந்து போனாா். அப்போது நீதிபதியை பார்த்து அவன் கேட்டது... "மது அருந்தியதற்காக தண்டனை கொடுத்த தாங்கள் அதனை தயாரிப்போர், விற்பனை செய்பவர்களுக்கு இவ்வரசு தரும் ஆதரவு மற்றும் சலுகைகளை, நீதித்துறை ௧ண்டும் காணாதிருப்பதற்காக முதல் சவுக்கடியின் தொடக்கம் இது" என்றான்..
Comments
Post a Comment