Posts

Showing posts from 2018

தொழிலாளர் பாதுகாப்பு

நான் வேலை செய்த நிறுவனத்தில் எனது ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கிக்கொண்டார்கள். இப்போது அதை திரும்ப தர என்னை அழைகழிக்கறார்கள். இது சட்டப்படி சரியான செயலா? இதற்கு சட்டத் தீர்வு என்ன? நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு அவர்களை கட்டாயப்படுத்தியோ அல்லது மிரட்டியோ வேலை செய்ய வைப்பது இந்திய தண்டனை சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். மேலும் இது தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது. இது போன்ற குற்றச் செயல்களுக்கு கீழ்காணும் பிரிவின் கீழ் வழக்கு பதிவும் செய்ய முடியும். IPC-374 : #சட்டப்பூர்வமற்ற #கட்டாய #உழைப்பு IPC-370 : #அடிமையாக #வகை #செய்தல் IPC-503 : #குற்றமுறு #மிரட்டல் IPC-405 : #குற்றமுறு #நம்பிக்கை #மோசடி., மற்றும் பல நீங்கள் தற்சமயம் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி விட்டால் வழக்கறிஞர் மூலம் அந்த நிறுவனத்திற்கு உங்கள் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கும் படி நோட்டீஸ் அனுப்பி உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதிகள் வாரியாக

🔴🔴 *பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதிகள் வாரியாக* இந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக சட்டமன்ற தொகுதிகள் ப‌ட்டிய‌ல்... *1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி* 1.கும்மிடிப்பூண்டி 2. பொன்னேரி (தனி) 3. திருவள்ளூர் 4. பூந்தமல்லி (தனி) 5. ஆவடி 6. மாதவரம் *2. வட சென்னை பாராளுமன்ற தொகுதி.* 1திருவொற்றியூர் 2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் 3. பெரம்பூர்4. கொளத்தூர் 5. திரு.வி.க. நகர் (தனி) 6. ராயபுரம் *3. தென் சென்னை பாராளுமன்ற தொகுதி.* 1விருகம்பாக்கம் 2. சைதாப்பேட்டை 3. தியாகராயநகர் 4. மயிலாப்பூர் 5. வேளச்சேரி 6. சோழிங்கநல்லூர் *4. மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி* 1. வில்லிவாக்கம் 2. எழும்பூர் (தனி) 3. துறைமுகம் 4. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி 5. ஆயிரம் விளக்கு 6. அண்ணாநகர் *5. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி* 1. மதுரவாயல் 2. அம்பத்தூர் 3. ஆலந்தூர் 4. ஸ்ரீபெரும்புதூர் (தனி) 5. பல்லாவரம் 6. தாம்பரம் *6. காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி* 1. ச

வரலாற்றில் இன்று - December 2

************************ *வரலாற்றில் இன்று!* (டிசம்பர் 02) *உலக கணினி எழுத்தறிவு தினம்  *பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன(2006)  *ஐக்கிய அரபு அமீரகம் தேசிய தினம்(1971)  *அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய், உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக்கப்பட்டது((1971)  *அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு செயல்பட துவங்கியது(1970)  ************************. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதை... உன்னழகைக் காட்டுதடி எண்ணமெனும் தேன்கூட்டில் இன்பக் கனல் மூட்டுதடி! வான நிலாப்பெண்ணை வட்டமிட்டு மேகமொன்று மோன முகத்தினிலே முத்தமிட்டுப் போகுதடி!  ************************. சுவாரசிய தகவல்கள் *பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு வருடத்தை எந்த உடை உடுத்துவது என்று சிந்திப்பர்.  *உலகின் பழமையான மரமாகக் கருதுவது பேரீட்ச்சை மரம்.  *ஆண்களின் ஆரோக்கியம் குறித்தே Noshavenovember அனுசரிக்கப்படுகிறது  *உலகின் பெரும்பாலான தேசியக் கொடியில் நட்சத்திரம் இருக்கும்  ************************. நித்தம் காலையில்... * கனவு பெரியதாக இரு

அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்

"அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்? அரசனும் ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!! "இ" வுக்கு அடுத்து "ஈ" வருவதேன்? இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட!! "உ" வுக்கு அடுத்து "ஊ" வருவதேன்? உழைப்பே ஊக்கம் என உணர்த்திட!! "எ" வுக்கு அடுத்து "ஏ" வருவதேன்? எதையும் ஏன் என்று சிந்தித்துப் பார்க்க!! "ஐ" மட்டும் ஏதோடும் சேராமல் தனித்து இருப்பதேன்? அதற்கு நான் ( i ) என்ற அகம்பாவம் அதிகம் உண்டு. "ஒ" வுக்கு அடுத்து "ஓ" வருவதேன்? ஒற்றுமையே ஓங்கும் என்பதை உணர்த்திட!!! எனவே நான் (i - ஐ) தான் என்கிற குணம், ஒரு மனிதனை தனிமைப்படுத்தி, ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளி விடும். தமிழே தாயே அழகு மொழி நீயம்மா,

கணவர்கள் #மனைவிக்கு #செய்யவேண்டியது

#கணவர்கள் #மனைவிக்கு #செய்யவேண்டியது.... 💟பள்ளியறையில் மட்டுமல்ல சமையலறையிலும் அவளுக்கு துணை கொடு... 💟மாதத்தில் மூன்று நாட்கள் மனைவிக்கு தாயாகு.. மற்ற நாளெல்லாம்  சேயாகு.. 💟இரவிலே தாமதித்து இல்லம் செல்வதை இயன்றவரை குறைத்திடு... 💟இயலாத நிலையில் அவள் இருந்திடக் கண்டாலே ,  உறவுதனைத் தவிர்த்திடு.. 💟சின்னச் சின்ன சண்டைகள் தினந்தோறும் போட்டுக்கொள்.. சினஞ்கூடி பெருஞ்சண்டை வராமல் பார்த்துக்கொள்... 💟அவள் கர்ப்பம் சுமைக்கையில் நீ அவளைச் சுமந்திடு... 💟விடுமுறை நாட்களில் காலைவரை அவள் அழகாய் தூங்கட்டும்..அவள் படுக்கை அறை சென்று உன்கை தேநீர் வழங்கட்டும்.. 💟உறவது முடிந்த பின்னே உன்பாட்டுக்கு தூங்காதே.. உன்னவள் உன் மார்பில் தூங்க ஓரிடம் கொடுக்க தவறாதே... 💟தாமதித்து வீடு வந்தால் தகுந்த காரணம் சொல்... 💟தப்பு உன்னில் இருந்தால் மன்னிப்பு கேள்... 💟வேலைக்குச் செல்லும் போதும், வேலைவிட்டு வந்த பின்னும் புன்னகை சேர்ந்த முத்தத்தை பூவையவளுக்கு போட்டுவிடு.. 💟சிறப்பான நிகழ்ச்சி எதற்கும் அவளை கூட்டிச்செல்.... 💟எடுப்பான பெண்ணைக் கண்டால் எட்டி நீயும் நின்று கொள்.. 💟நோயிலே அவள் வீழ்ந்தால் 

Licence

தொலைந்து போன டிரைவிங் லைசென்ஸ் போலிஸ் ஸ்டேஷன் போகாமல் பெறுவது எப்படி? ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலைப் பெற தமிழக அரசு புதிய வசதியை தொடங்கியுள்ளது. இதற்கான உத்தரவை போக்குவரத்து ஆணையர் பிறப்பித்துள்ளார். இதன்படி ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால், அதை மீண்டும் பெற எப்ஐஆர் பெறத் தேவையில்லை. வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் கவனக் குறைவால் ஓட்டுநர் உரிமம் தொலைந்து போனால் என்ன செய்வது என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே உள்ளது. பொதுவாக ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், சம்பந்தப்பட்ட நபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அந்தப் புகார் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவருக்கு புகார் மனு ஏற்பு சான்றிதழ் அளிக்கப்படும். இதற்கே 15 முதல் 20 நாட்கள் வரை காலதாமதம் ஏற்படும். அதன்பிறகே, அவர் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மீண்டும் புதியதாக பதிவு செய்ய முடியும். இதன்பிறகு ஆர்டிஓ அந்த ஆவணத்தை சரிபார்த்து ஓட்டுநர் உரிமத்தை வழங்குவார். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள இடைத்தரகர்கள் லஞ்சம் பெற்றுக

மகிழ்வாக_வாழ_பல_வழிகள்

#மகிழ்வாக_வாழ_பல_வழிகள்... 1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள். 2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள். 3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள். 4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள். 6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள். 7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும். 8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள். 9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது! 10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள். 11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள். 12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள். 13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் ம

வரலாற்றில் இன்று - *20.09.2018

வரலாற்றில் இன்று - *20.09.2018 !!* சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள் ! 'விதைகள் தங்களுக்கு பிடித்த இடத்தை தேடி முளைப்பதில்லை. அதற்கு கிடைத்த இடங்களில் தன்னை செடியாகவோ, மரமாகவோ மாற்றிக்கொள்கின்றன. அதைப்போலதான் மனிதனின் வாழ்க்கையும் இருக்க வேண்டும். விழுந்துவிட்டோமே என்று எண்ணாமல் விழுந்த இடத்தில் இருந்து எழுந்து முன்னேறிச் செல்லுங்கள். வாழ்க்கை வரமாகும்." மார்க்கண்டேய கட்சு 📰 முன்னாள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், உயர்நீதிமன்றங்களில் முதன்மை நீதிபதியாகவும் இருந்த மார்க்கண்டேய கட்சு 1946ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி பிறந்தார். 📰 இவர் 1967-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பயின்று சட்டப்படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார். 📰 இவர் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் புதுதில்லி, ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், லக்னோ ஆகியவற்றில் கௌரவப் பேராசிரியராக இருந்தார். 📰 இவர் இந்தியப் பத்திரிக்கை கவுன்சில் தலைவராக (2011-2014) இருந்தார். சமூக மாற்றத்திற்கான நல்ல கருத்துகளைப் பரப்பிய இவர் தனது 72வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். ஜேம்ஸ் திவார் 🍼 வாக்கும் பிளா