பேஸ்புக் அரசியல் விளம்பரம்: கோடிகளைக் கொட்டிய பாஜக முதலிடம்!
ஹைலைட்ஸ்: பேஸ்புக் அரசியல் விளம்பரங்கள் வெளியிட்டதில் பாஜக முதலிடம். காங்கிரஸ் 2வது இடம். அதிமுகவுக்கு 5வது இடம். பேஸ்புக்கில் கடந்த ஆறு வாரங்களில் 48 பக்கங்களிலிருந்து சுமார் 18,000 அரசியல் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன என நாளேடு ஒன்றின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்டங்கள் முடிந்துள்ள நிலையில் மூன்றாவது கட்டத் தேர்தல் வரும் 23ஆம் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் பேஸ்புக்கில் மொத்தம் 14.7 கோடி ரூபாய் செலவில் 72,694 விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 35,000 விளம்பரங்கள் அரசியல் விளம்பரங்கள். இதில் 18,000 விளம்பரங்கள் 48 பக்கங்களிலிருந்து வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக அவை ரூ.5.3 கோடி செலவிட்டுள்ளன. குறிப்பாக 50,000 ரூபாய்க்கு அதிகமான விலை கொடுத்து செய்யப்பட்ட விளம்பரங்களில் 85% அந்த 48 பக்கங்களால் வெளியிடப்பட்டவை. பெரிய செலவில் அரசியல் விளம்பரங்களைச் செய்திருக்கும் பக்கங்கள் நேரடியாக அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கொண்டவையாக இல்லை. பாஜக ஆதரவு விளம்பரங்கள் Bharat Ke Maan Ki Baat எ