Posts

Showing posts from September, 2018

கணவர்கள் #மனைவிக்கு #செய்யவேண்டியது

#கணவர்கள் #மனைவிக்கு #செய்யவேண்டியது.... 💟பள்ளியறையில் மட்டுமல்ல சமையலறையிலும் அவளுக்கு துணை கொடு... 💟மாதத்தில் மூன்று நாட்கள் மனைவிக்கு தாயாகு.. மற்ற நாளெல்லாம்  சேயாகு.. 💟இரவிலே தாமதித்து இல்லம் செல்வதை இயன்றவரை குறைத்திடு... 💟இயலாத நிலையில் அவள் இருந்திடக் கண்டாலே ,  உறவுதனைத் தவிர்த்திடு.. 💟சின்னச் சின்ன சண்டைகள் தினந்தோறும் போட்டுக்கொள்.. சினஞ்கூடி பெருஞ்சண்டை வராமல் பார்த்துக்கொள்... 💟அவள் கர்ப்பம் சுமைக்கையில் நீ அவளைச் சுமந்திடு... 💟விடுமுறை நாட்களில் காலைவரை அவள் அழகாய் தூங்கட்டும்..அவள் படுக்கை அறை சென்று உன்கை தேநீர் வழங்கட்டும்.. 💟உறவது முடிந்த பின்னே உன்பாட்டுக்கு தூங்காதே.. உன்னவள் உன் மார்பில் தூங்க ஓரிடம் கொடுக்க தவறாதே... 💟தாமதித்து வீடு வந்தால் தகுந்த காரணம் சொல்... 💟தப்பு உன்னில் இருந்தால் மன்னிப்பு கேள்... 💟வேலைக்குச் செல்லும் போதும், வேலைவிட்டு வந்த பின்னும் புன்னகை சேர்ந்த முத்தத்தை பூவையவளுக்கு போட்டுவிடு.. 💟சிறப்பான நிகழ்ச்சி எதற்கும் அவளை கூட்டிச்செல்.... 💟எடுப்பான பெண்ணைக் கண்டால் எட்டி நீயும் நின்று கொள்.. 💟நோயிலே அவள் வீழ்ந்தால் 

Licence

தொலைந்து போன டிரைவிங் லைசென்ஸ் போலிஸ் ஸ்டேஷன் போகாமல் பெறுவது எப்படி? ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலைப் பெற தமிழக அரசு புதிய வசதியை தொடங்கியுள்ளது. இதற்கான உத்தரவை போக்குவரத்து ஆணையர் பிறப்பித்துள்ளார். இதன்படி ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால், அதை மீண்டும் பெற எப்ஐஆர் பெறத் தேவையில்லை. வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் கவனக் குறைவால் ஓட்டுநர் உரிமம் தொலைந்து போனால் என்ன செய்வது என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே உள்ளது. பொதுவாக ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், சம்பந்தப்பட்ட நபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அந்தப் புகார் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவருக்கு புகார் மனு ஏற்பு சான்றிதழ் அளிக்கப்படும். இதற்கே 15 முதல் 20 நாட்கள் வரை காலதாமதம் ஏற்படும். அதன்பிறகே, அவர் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மீண்டும் புதியதாக பதிவு செய்ய முடியும். இதன்பிறகு ஆர்டிஓ அந்த ஆவணத்தை சரிபார்த்து ஓட்டுநர் உரிமத்தை வழங்குவார். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள இடைத்தரகர்கள் லஞ்சம் பெற்றுக

மகிழ்வாக_வாழ_பல_வழிகள்

#மகிழ்வாக_வாழ_பல_வழிகள்... 1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள். 2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள். 3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள். 4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள். 6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள். 7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும். 8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள். 9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது! 10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள். 11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள். 12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள். 13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் ம

வரலாற்றில் இன்று - *20.09.2018

வரலாற்றில் இன்று - *20.09.2018 !!* சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள் ! 'விதைகள் தங்களுக்கு பிடித்த இடத்தை தேடி முளைப்பதில்லை. அதற்கு கிடைத்த இடங்களில் தன்னை செடியாகவோ, மரமாகவோ மாற்றிக்கொள்கின்றன. அதைப்போலதான் மனிதனின் வாழ்க்கையும் இருக்க வேண்டும். விழுந்துவிட்டோமே என்று எண்ணாமல் விழுந்த இடத்தில் இருந்து எழுந்து முன்னேறிச் செல்லுங்கள். வாழ்க்கை வரமாகும்." மார்க்கண்டேய கட்சு 📰 முன்னாள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், உயர்நீதிமன்றங்களில் முதன்மை நீதிபதியாகவும் இருந்த மார்க்கண்டேய கட்சு 1946ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி பிறந்தார். 📰 இவர் 1967-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பயின்று சட்டப்படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார். 📰 இவர் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் புதுதில்லி, ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், லக்னோ ஆகியவற்றில் கௌரவப் பேராசிரியராக இருந்தார். 📰 இவர் இந்தியப் பத்திரிக்கை கவுன்சில் தலைவராக (2011-2014) இருந்தார். சமூக மாற்றத்திற்கான நல்ல கருத்துகளைப் பரப்பிய இவர் தனது 72வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். ஜேம்ஸ் திவார் 🍼 வாக்கும் பிளா

செப்டம்பர் 19

விண்வெளியில் மாரத்தான் ஓடிய வீராங்கனை பிறந்த தினம் - *செப்டம்பர் 19 !!* இன்றைய பொன்மொழி 'கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போராடும் எண்ணமே இல்லாமல் போய் விடும்...!" சுனிதா வில்லியம்ஸ் ✈ இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி பிறந்தார். ✈ 1987-ல் அமெரிக்க கடற்படையில் இளநிலை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவர் 2 ஆண்டுகளில் கடற்படை விமானியானார். ✈ 2006ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி டிஸ்கவரி விண்வெளி கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டார். அப்பொழுது இவர் பகவத்கீதை, விநாயகர் சிலை, கொஞ்சம் சமோசாக்களை விண்வெளிக்கு எடுத்துச்சென்றார். ✈ விண்வெளியில் மாரத்தான் ஓடிய முதல் நபர் சுனிதா. விண்வெளியில் ஓடிக்கொண்டே தனது தலைமுடியை கத்தரித்தார். பிறகு, 'லாக்ஸ் ஆப் லவ்" அமைப்புக்கு அதை வழங்கினார். வில்லியம் கோல்டிங் ✍ இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டிஷ் நாவல் ஆசிரியரும், கவிஞருமான சர் வில்லியம் ஜெரால்டு கோல்டிங் 1911ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி இங்கிலாந்தின் கார்ன்வால் பகுதியில் உள

சில உளவியல் உண்மைகள்

சில உளவியல் உண்மைகள் ! 1. அதிகம் சிரிப்பவர்கள்..... தனிமையில் வாடுபவர்கள்.. 2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.. 3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.. 4. அழுகையை அடக்குபவர்கள்... மனதால் பலவீனமானவர்கள்.. 5. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!! மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.. 6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!! அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்.. 7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்... அன்புக்காக ஏங்குபவர்கள்...!!!! பேச்சு - உளவியல் ஆலோசனைகள்...! 8. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.. 9. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!! 10. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் .. 11. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும். 12. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். . 13. பேசும்போது முடியை கோதிக் கொ

வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் - *செப்டம்பர் 17

வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் - *செப்டம்பர் 17 !!* சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..! 'எதை வேண்டுமானாலும் புள்ளி விவரங்களால் அளந்திட முடியும், உண்மையைத்தவிர." 🏁 பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். 🏁 இவர் காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியது மட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக் கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார். 🏁 இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி 'யுனெஸ்கோ நிறுவனம்" பெரியாருக்கு 'புத்துலக தொலைநோக்காளர்", 'தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்", 'சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை" என பாராட்டி விருது வழங்கியது. 🏁 அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி, பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் மற்றும் தந்தை பெரியார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். 🏁 பகுத்தறிவின் சிற்பி, அறிவு பூட்டின் திறவுகோல், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்

ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது

✍✍✍✍✍✍✍✍✍✍ *ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது * *ஆண் என்பவன்...* *கடவுளின் உன்னதமான படைப்பு.* *சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..* *பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்.* *காதலிக்கு பரிசளிக்க,* *தன் பர்ஸை காலி செய்பவன்.* *மனைவி குழந்தைகளுக்காக ,  தன் இளமையை அடகு வைத்து அலட்டிக் கொள்ளாமல் அயராது உழைப்பவன்.* *எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்..* *இந்த போராட்டங்களுக்கு இடையில்,* *மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி,* *தாங்கிக்கொண்டே ஓடுபவன்.* *அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்.* *அவன் வெளியில் சுற்றினால்,* *'உதவாக்கரை' என்போம்.* *வீட்டிலேயே இருந்தால்,* *'சோம்பேறி' என்போம்.* *குழந்தைகளை கண்டித்தால்,* *'கோபக்காரன்' என்போம்,* *கண்டிக்கவில்லை எனில்,* *'பொறுப்பற்றவன்' என்போம்.* *மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில்* *'நம்பிக்கையற்றவன்' என்போம்,* *அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவ