hard work
கடுமையாக உழைக்காதே, திறமையாக உழை நாம் குளிக்கும் பொழுது ஒரு பெரிய Mug மூலம் தண்ணீரை மொண்டு குளிப்போம். ஒருவேளை நான் எதையும் கஷ்டப்பட்டு தான் செய்வேன். என்று சொல்லி, ஸ்பூனால் தண்ணீரை மொண்டு அதில் குளித்தால், அதுபோல் செய்வது எவ்ளவு பெரிய பைத்தியக்காரத்தனம்? முதலில் அதுபோல் யாராவது செய்வார்களா? கண்டிப்பாக செய்ய மாட்டார்கள். ஆனால் ரொம்ப சுலபமாக முடிக்க வேண்டிய ஒரு வேலையை, கஷ்டப்பட்டு செய்கிறேன் என்று சொல்லி, சிலர் செய்வது என்பது, ஸ்பூனால் தண்ணீரை மொண்டு குளிக்கும் முட்டாள்தனத்துக்கு ஒப்பானது தான். திறமையாக உழைத்து ஜெயிப்பதில் [Smart Work] விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ஆகச்சிறந்த உதாரணம் என்று சொல்லலாம். எடிசன் என்றவுடன் அவர் எலெக்ட்ரிக் பல்ப் கண்டு பிடித்தார், மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல கண்டு பிடிப்புகளை கண்டு பிடித்தார் என்பது நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் பலருக்கு தெரியாத ஒரு உண்மை எடிசன்க்கும் முன்பே ஒரு விஞ்ஞானி எலெக்ட்ரிக் பல்பை கண்டு பிடித்து விட்டார். அவர் இங்கிலாந்து விஞ்ஞானியான ஜோசப் ஸ்வான். ஜோசப் ஸ்வான் எடிசனை விட 19 வயது மூத்தவர்....