மே 3
*மே 3.*
1494 - ஜமெய்க்கா எனப் பின்னர் பெயரிடப்பட்ட நாட்டை முதன் முதலில் கிறிஸ்தோபர் கொலம்பஸ் கண்டார்.
1802 - வாஷிங்டன், டிசி நகரமாக்கப்பட்டது.
1913 - இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிஸ்சந்திரா வெளியானது.
1916 - உயிர்த்த ஞாயிரன்று இடம்பெற்ற கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்ட ஐரிஷ் தலைவர்கள் டப்ளின் நகரில் தூக்கிலிடப்பட்டார்கள்.
1939 - சுபாஸ் சந்திர போஸ்
அனைத்திந்திய பார்வார்டு ப்ளாக் கட்சியை ஆரம்பித்தார்.
1941 - பிபிசி தமிழோசை
வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
1959 - முதலாவது கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன.
1973 - சிக்காகோவின் சியேர்ஸ் கோபுரம் உலகின் அதியுயர் கோபுரமானது.
1979 - மார்கரெட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமர் ஆனார்.
2002 - இந்தியாவின்
ராஜஸ்தானில் இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
*பிறப்புகள்:*
1933 – ஜேம்ஸ் ப்ரௌன் , சோல் இசையின் தந்தை என அழைக்கப்பட்ட
அமெரிக்க இசை வல்லுநர்.
1935 – சுஜாதா , தமிழக எழுத்தாளர்.
1951 – அசோக் கெலட் ,
இராசத்தானின் 21வது முதலமைச்சர்.
1959 – உமா பாரதி , மத்தியப் பிரதேசத்தின் 16வது முதலமைச்சர்.
*இறப்புகள்:*
1680 – சிவாஜி , மராட்டியப் பேரரசர்.
1969 – சாகீர் உசேன் , இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவர்.
1971 – ஆர். நடராஜ முதலியார் , தமிழகத் திரைப்படத்துறையின் முன்னோடி, ஊமைத் திரைப்படங்களைத் தயாரித்தவர்.
*உலக பத்திரிகை சுதந்திர நாள்.🙂*
Comments
Post a Comment