எப்படி இருந்த நாம் இப்பிடி ஆயிட்டோம்

எப்படி இருந்த நாம் இப்பிடி ஆயிட்டோம்..
==========================================
1. நாங்க பாக்குற மரத்திலெல்லாம் மஞ்சத் துணிய சுத்தி பூ பொட்டு வச்சிருந்த வரைக்கும் ஒரு பயலும் மரத்த வெட்டாமத்தான் இருந்தான். என்றைக்கு இதெல்லாம் மூட நம்பிக்கைன்னு கூவ ஆரம்பிச்சானோ அன்றைக்கே இருக்குற மரத்த பூராத்தையும் வெட்ட ஆரம்பிச்சிட்டன்..

2. நாங்க ஆல மரத்துக்கு கீழேயும், அரச மரத்துக்கு கீழேயும் பிள்ளையார வச்சி வழிபட்டுகிட்டு இருக்கும் போதெல்லாம் மனுச மக்க சுத்தமான காத்த சுவாசிச்சிட்டு இருந்தான். இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு என்றைக்கு பினாத்த ஆரம்பிச்சானோ அன்றைக்கே சுத்தமான காத்த தேடி ஓடிட்டு இருக்கான்..

3. நாங்க விளையுற நிலத்த சாமியா நினைச்சு பூஜை பண்ணிட்டு இருந்தப்போ மனுஷ மக்க சுத்தமான இயற்கையான சாப்பாட்ட சாபிட்டுட்டு ஆரோக்கியமா இருந்தான். இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு என்றைக்கு பொலம்ப ஆரம்பிச்சானோ அன்றைக்கே இரசாயன சாப்பாட சாப்பிட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிட்டு இருக்கான்.

.4. நாங்க வீட்டுக்கு முன்னாடி கோலம் போடுறப்பவும், சூடம் ஏத்துறப்பவும், சாணியால வாச தொளிக்குறப்பவும், விளக்கு ஏத்துறப்பவும் இருந்த நோய் நொடியில்லாத வாழ்க்கை, இதையெல்லாம் மூடநம்பிக்கைன்னு இவன் நினைக்க ஆரம்பிச்ச உடனே எதிர்ப்பு சக்தி குறைச்சு துவண்டு போயிட்டான்..

5. நாங்கெல்லாம் பய பக்தியா சாமி கும்பிடுறவரைக்கும் ஒரு முதியோர் இல்லமும் இல்லாமல் இருந்தது, மனுஷ மக்களும் நீதி நேர்மையோடு வாழ்ந்து வந்தனர். இதையெல்லாம் என்றைக்கு மூட நம்பிக்கைன்னு நாத்திகம் பேசினானோ அன்றைக்கு பெத்த அப்பன் ஆத்தால முதியோர் இல்லத்துல கொண்டு போய் தள்ளிட்டான்
.---------------------------------------------------------

அப்பு இதெல்லாம் கொஞ்சம்தேன்....இன்னும் சொன்னா எலவு வீடு தோத்துடும்.....இனிமேலாவது சூதானமா திருந்த பாருங்கப்பு அம்புட்டுதான் சொல்லிபுட்டேன்...

Comments

Popular posts from this blog

How to Crack FaceBook Social TooLkit & Use Premium Tools for Free

பரம்பரை